உத்தரகோசமங்கை:உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதர் சுவாமி கோயில் பழமையான சிவாலயம்.
இங்கு ஆண்டிற்கு ஐந்து முறை உற்ஸவர் சிவகாமி அம்மன் சமேத நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. 6 வது முறையாக மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத் ரா தரிசனத்தில் பச்சை மரகத நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும்.இன்று( ஜூலை 8) அதிகாலை 4:00 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் ஆனி உத்திரத்தை முன்னிட்டு உற்ஸவர் களுக்கு 21 வகை யான அபிஷேக ஆராதனைகளும், தாழம்பூ சாற்றி வழிபாடும் நடக்கிறது. சிவனடியார்கள், பக்தர் களால் சிவபுராணம்,திருவாசகம், நாமாவளி பாடல்கள் பாடப்படும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.