நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாக இருப்பவர் சிவன். சிதம்பரத்தை ஆகாயத்தலமாக குறிப்பிடுவர். இங்குள்ள பொற்சபையில், அண்ணாந்து பார்த்தால் வெட்ட வெளி தெரியும். பரந்த ஆகாயத்தின் எல்லையைத் தொட்டவர்கள் யாருமில்லை. அதுபோல சிவனும் எல்லையற்றவர். யாராலும் அறியப்படாத ரகசியமாக இன்னும் இருக்கிறார். இதை ’சிதம்பர ரகசியம்’ என்பர். சிவன் காற்றாக காளஹஸ்தியிலும், நீராக திருவானைக்காவலிலும் (திருச்சி), நெருப்பாக திருவண்ணாமலையிலும், நிலமாக திருவாரூர், காஞ்சிபுரத்திலும் அருள்புரிகிறார்.