பொருள்: காமம், கோபம், பேராசை என்னும் மூன்றும் நரகத்தின் நுழைவு வாசல்கள். இவை உயிர்களை நாசப்படுத்தி கீழ்நிலைக்கு ஆளாக்குகின்றன. இதிலிருந்து உயிர்கள் விடுபட வேண்டும். அர்ஜூனா! இதில் இருந்து விடுபட்ட மனிதன் தன்னை மேன்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுகிறான். அதன் மூலம் மோட்சத்தை அடைகிறான். அதாவது என்னை வந்தடைகிறான்.