கொட்டவாக்கம்: காஞ்சிபுரம் அடுத்த, கொட்டவாக்கம் கிராமத்தில், பழமை வாய்ந்த மாரியம் மன் கோவில் உள்ளது. இக்கோவில் ஆனித்திருவிழா, 5ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் (ஜூலை., 7ல்), அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.பகல், 1:00 மணிக்கு கூழ்வார்த்தல், மாலை, 5:00 மணிக்கு பொங்கலிடும் நிகழ்ச்சிகளும் நடந்தன. இரவு, 10:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொட்டவாக்கம் கிராமத்தைச்சுற்றியுள்ள பல கிராமவாசிகள், அம்மனை தரிசித்தனர்.