பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
01:07
பூசிவாக்கம்:பூசிவாக்கம் கிராமத்தில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கும்பாபிஷே கம் நேற்று (ஜூலை., 8ல்) , கோலாகலமாக நடந்தது.
வாலாஜாபாத் அடுத்த, பூசிவாக்கம் கிராமத்தில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இதன் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் (ஜூலை., 7ல்) காலை, முதல் கால பூஜை நடந்தது.நேற்று (ஜூலை., 8ல்) காலை, 8:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜையும்; 9:00 மணிக்கு கலச புறப்பாடும், 9:45 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேக நீரும் ஊற்றப்பட்டது.விழாவில், பூசிவாக்கம் கிராமத்தைச் சுற்றியுள்ள பல கிராம மக்கள் பங்கேற்றனர்.