1. எவர் ஒருவர் நண்பரைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன். 2 எவர் ஒருவர் வழிகாட்டியைத் தேடி அலைகின்றாரோ அவருக்கு அல்குர்ஆன் போதுமானது. 3. எவர் ஒரு உபதேசியைத் தேடி அலைகின்றாரோ, அவருக்கு மரணம் போதுமானதாகும். 4 எவர் பணத்தைத்தேடி அலைகின்றாரோ, அவருக்கு போதுமென்ற மனமே போதுமானது. 5. எவர் இந்த நான்கிலும் படிப்பினை பெறவில்லையோ, அவருக்கு நரகம் போதுமானது.