கடலாடியில் ஜூலை 15ல் கிராம கோயில் பூஜாரிகள் நலசங்க மாநாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2019 03:07
கடலாடி:கிராம கோயில் பூஜாரிகள் நலச்சங்க மாவட்ட மாநாடு ஜூலை 15ல் முதுகுளத் துாரில் நடக்கிறது.
கடலாடியை சேர்ந்த கிராம கோயில் பூஜாரிகள் நலச்சங்க மண்டல தலைவர் ஆர்.சண்முக சுந்தரம் கூறியதாவது;முதுகுளத்துார் அய்யனார் கோயில் வளாகத்தில் ஜூலை 15ல் (திங்கள் கிழமை) கிராம கோயில் பூஜாரிகளின்6வது மாவட்ட மாநாடு நடக்கிறது.
மாநிலத்தலைவர் வாசு பங்கேற்கிறார். கிராமக் கோயில்களில் 1 கால பூஜை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். தற்போது வழங்கப்படும் 1000 ரூபாய் மாத ஒய்வூதியத்தை உயர்த்தி தர வேண்டும்.அனைத்து பூஜாரிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நல வாரிய உறுப் பினர்களுக்கான அட்டை வழங்க வேண்டும்உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை அரசுக்கு தீர்மானமாக நிறைவேற்றி வழங்க உள்ளோம், கிராம பூஜாரிகள் நல வாரிய உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறும் உறுப்பினர்கள், ஒரு கால திட்டத்தில் பயன்பெறும் பூஜாரிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், என்றார்.