நடுவீரப்பட்டு பத்திரக்கோட்டையில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2019 03:07
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை பட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர், கற்பக வள்ளியம்மன், பாலமுருகன் கோவிலுக்கு நேற்று திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கடந்த 7 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் விழா துவங்கியது. அன்று மாலை 4:00 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்பணம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.நேற்று 8 ம் தேதி, திங்கள்கிழமை காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்து 9:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.10:00 மணிக்கு யாகசாலையில் உள்ள கலசங்கள் ஆலய உலாவாக வந்து 10:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இரவு 10:00 மணிக்கு அம்மன் வீதி உலா நடந்தது.