மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வானமாமலை ஜீயர் தரிசனம் செய்தார். சாதுர்மாஸ்ய விரதத்தையொட்டி வானமாமலை ஜீயர் தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் பக்தி உலா முடிந்து ஐதராபாத் செல்லவுள்ளார். அதன்படி மதுரை வசுதாரா வளாகத்தில் நேற்று முன்தினம் (ஜூலை., 7ல்) எழுந்தருளினார். நேற்று (ஜூலை., 8ல்)காலை கூடலழகர் பெருமாள் கோயிலில் மங்களாசாசனம், சாத்துமுறை கோஷ்டியில் பங்கேற்றார்.
மாலை டி.வி.எஸ். நகரில் இரு சீடர்கள் பாத பூஜை செய்தனர். மாலை 6:30 மணிக்கு வசுதாரா வளாகத்தில் ஜீயரின் பக்தி சொற்பொழிவு, சாத்துமுறை கோஷ்டி நடந்தது. இன்று (ஜூலை 9) காலை 8:00 மணி முதல் ஸ்ரீபாத தீர்த்தம், காலை 11:30 மணிக்கு அன்னதானம் முடித்து சேலம் செல்கிறார். ஏற்பாடுகளை வரவேற்பு கமிட்டி தலைவர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.