காரைக்குடி:காரைக்குடி ஸ்ரீஊமகுள வட ஐய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா 35 ஆண்டுகளுக்கு பிறகு கோட்டையூர் கோட்டை நாச்சியம்மன் கோயிலில் இருந்து நடந்தது.
கோட்டையூர் கோட்டை நாச்சியம்மன் கோயில் முன் புரவி எடுப்பு விழாவிற்காக தயாராக இருந்த கற்பகவிநாயகர் தலைமையில் ஐய்யனார் குதிரை, கருப்பர் குதிரை, அடைக்கலம் காத்தார் குதிரை என 21 மண் குதிரைகள் புறப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடனும், புரவி எடுப்பு விழா நடந்தது.கோட்டை நாச்சியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட குதிரைகளில் 19 மண் குதிரைகள் ஸ்ரீஊமகுள வடஐயனார் கோயிலுக்கும் ஒரு மண் குதிரை வாட்டர் டேங்க் ஐய்யனார் கோயிலுக்கும், ஒரு மண் குதிரை அடைக்கலம் காத்த ஐய்யனார் கோயிலுக்கும் கொண்டு செல்லப்பட்டது. குதிரைகள் கோயில் வந்தடைந்ததும் ஊமகுளவட ஐய்யனார் கோயிலில் கிடா வெட்டி அன்னதானம் நடந்தது.