இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சகாயமாதா ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2012 11:03
தூத்துக்குடி: ஐ.நா.,சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி சர்சில் மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிராத்தனை நடத்தப்பட்டது.இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது ஏராளமான தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். சர்வதேச போர்விதிமுறைகளுக்கு புறம்பாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசிற்கு எதிராக ஐ.நா., சபையில் அமெரிக்கா சார்பில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்த தீர்மானத்தை இந்திய அரசு முழு மனதோடு ஆதரிக்க வேண்டும் என்றும், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அன்பையும், ஆதரவினையும் தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடியில் உள்ள லயன்ஸ் டவுன் சகாயமாதா ஆலயத்தில் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் பிராத்தனை நடத்தினர். ஆலயத்தின் பங்குத்தந்தை ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த பிராத்தனை கூட்டத்தில் ஆயர் இல்ல அமைச்சர் பிராங்களின் உட்பட பலர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.