ராமேஸ்வரத்தில் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து கோரி ஆர்ப்பாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2019 03:07
ராமேஸ்வரம்:இந்து கோயில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய கோரி ராமேஸ்வர த்தில் இந்து முன்னணியினர் உண்டியலை உடைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழகத்தில் உள்ள இந்து அறநிலைதுறையின் கோயில்களில் சிறப்பு தரிசனத்திற்கு கட் டணம் வசூலித்து பக்தர்களை அனுமதிப்பதால் ஏழை, நடுத்தர குடும்ப பக்தர்கள் பெரிதும் பாதிக்கின்றனர். ஆகையால் கோயில்களில் தரிசனத்திற்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆக.,4 ல் நடக்கவுள்ள ஆடித்தேரோட்டத் திற்கு நான்கு ரதவீதி சாலையை சரி செய்ய கோரி நேற்று (ஜூலை., 14ல்) ராமேஸ்வரத்தில் இந்து முன்னணியினர் உண்டியல்களை உடைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் இந்து முன்னணி மாவட்ட பொதுசெயலர் ராமமூர்த்தி, மாவட்ட தலைவர் ராஜசேகர், மாவட்ட துணை தலைவர் சரவணன், ராமேஸ்வரம் நகர் தலைவர் நம்புராஜன், பா.ஜ.க., நகர் பொருளாளர் ராமு, நிர்வாகி நாகேந்திரன், பாரதீய மஸ்தூர் சங்க தலைவர் பாரதிராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.