ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் ரெங்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இரண்டு நாட்கள் யாகசாலை பூஜைகளுடன், பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நீர் பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து பூர்ணாகுதி, கடம் புறப்பாடு நிகழ்ச்சிகளுக்குப்பின் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப் பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து கருவறையில் அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அன்னதானம்நடந்தது.