கிருஷ்ணராயபுரம் அருகே கோவில் புனரமைப்பு: அம்மனுக்கு பாலாலய பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2019 03:07
கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் மாரியம்மன், பகவதியம்மன் சுவாமி கோவில் புனரமைக்கப்படுவதால், பாலாலய பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்த குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதை தொடர்ந்து இன்று (ஜூலை., 15ல்) காலை, 6:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு மற்றும் யாக பூஜை நடக்கிறது. பின், 7:00 மணிக்கு மேல், கோவில் திருப்பணி துவக்கப்படுகிறது.