பதிவு செய்த நாள்
16
ஜூலை
2019
02:07
உடுமலை:உடுமலை, மாரியம்மன் கோவிலில், நிர்வாகத்தின் அனுமதியில்லாமல் செய்யக் கூடாத நடைமுறைகள் குறித்து, எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள, அனைத்து கிராம மக்களின் நம்பிக்கை தெய்வமாக இருக்கும் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. தேர்த்திருவிழா மற்றும் ஆடி மாத விழாக்கள் கோவிலில் கொண்டாடப்படுகிறது.
பக்தர்கள், விசேஷ நாட்களில், வேண்டுதலை நிறைவேற்ற, பிரசாதம் செய்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கி வருகின்றனர்.குறிப்பாக, ஆடி மாதம் துவங்கியதுமே, அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூழ் படைத்து வினியோகிப்பதும், சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுவதும் வழக்கமாக நடக்கிறது.
ஆடி மாதம் துவங்க, ஓரிரு நாட்கள் உள்ள நிலையில், கோவில் வளாகத்தில், பக்தர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு ள்ளது.அதில், கோவில்களில் கற்பூரம் ஏற்ற தடை செய்யப்பட்டுள்ளது. எந்த காரணங்களுக் காகவும், வெடி பொருட்கள் கோவில் உள்ளே மற்றும் வெளியிலும் வெடிக்கக்கூடாது. அனுமதியில்லாத இடங்களில் நெய்தீபம் ஏற்றக்கூடாது. கோவில் வளாகத்தில் தனிநபர் சமையல் செய்யக்கூடாது.
உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி இல்லாமல், கோவிலுக்கு வெளியில் தயார் செய்யும் பிரசாதங்களை கோவில் வளாகத்தில் வினியோகம் செய்யக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. கோவிலை துாய்மையாக பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவிப் புகள் வைக்கப்பட்டுள்ளன.இந்த அறிவிப்புகள், கோவிலில் வெளிநபர்கள் மூலம் பக்தர்களு க்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், கோவில் வளாகத்தை பராமரிப்பதாகவும் இருப்பினும், பக்தர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடி மாதத்தில் பிரசாதம் வழங்க திட்டமிட்ட பக்தர்கள், இந்த அறிவிப்பால் ஏமாற்றமடைந்து ள்ளனர்.கோவில் செயல் அலுவலர் சந்திரமதி கூறுகையில்,”இந்து அறநிலையத்துறையிலி ருந்து, இந்த அறிவிப்புகளை கோவில் வளாகத்தில் பின்பற்ற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு ள்ளது. பக்தர்கள் இதனை பின்பற்றும் வகையில், அறிவிப்பு பலகை வைக்கவும், அறிவுறுத்தப் பட்டது. இதன் அடிப்படையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் பிரசாதம் படைத்து பக்தர்களுக்கு வினியோகிக்க விரும்புவோர், கோவிலின் வெளியில் வைத்து வழங்கிக்கொள்ளலாம்” என்றார்.