பதிவு செய்த நாள்
16
ஜூலை
2019
02:07
உடுமலை:உடுமலை, சாய்பாபா கோவிலில், குரு பூர்ணிமா உற்சவம் இன்று (ஜூலை., 16ல்) நிறைவு பெறுகிறது.உடுமலை, தில்லை நகர் ஆனந்த சாய்பாபா கோவிலில் ஆண்டு விழா மற்றும் ஆடி மாத பவுர்ணமி தினத்தையொட்டி குருபூர்ணிமா உற்சவம் நேற்றுமுன்தினம் (ஜூலை., 14ல்) துவங்கியது.
விழாவில் நேற்று (ஜூலை., 15ல்) காலை, 10:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம், மாலையில், திருவிளக்கு பூஜையும் நடந்தன. விழா நிறைவாக இன்று (ஜூலை., 16ல்) காலை, 7:00 மணிக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.