பதிவு செய்த நாள்
16
ஜூலை
2019
02:07
நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு ராணிப்பேட்டை ஸ்ரீபாலமுருகன் கோவிலில் நேற்று (ஜூலை., 15ல்) மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (ஜூலை., 14ல்) காலை 8:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், மாலை 5:00 மணிக்கு வாஸ்துசாந்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் நடந்தது. அன்று இரவு 9:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று (ஜூலை., 15ல்) காலை 6:00 மணிக்கு காப்பு கட்டுதல், கோ பூஜை, நாடி சந்தானம், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 9:15 மணிக்கு மகா தீபாராதனையும், 9:30 மணிக்கு யாகசாலையில் வைத்துள்ள கலசங்கள், கோவில் உலாவாக வந்து 10:00 மணிக்கு மகா கும்பாபி ஷேகம் நடந்தது. பின், 10:15 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.