ரஸாலு என்ற மாம்பழ வகை ஆந்திராவில் பிரசித்தம். அதைப் பிழிந்தால் சாறு கொட்டும். அது போல மகாபாரதம் என்னும் மாம்பழத்தின் சாறுதான் விஷ்ணு சகஸ்ரநாமம். பாரதக்கதை முழுவதும் அதில் அடங்கியிருக்கிறது. தெலுங்கில், மகாபாரதத்தின் சிறப்பை,சாப்பிட்டா வடை மட்டுமே சாப்பிடணும்! கேட்டா மகாபாரதத்தை மட்டுமே கேட்கணும் என்ற அர்த்தம் தரும் பழமொழி உண்டு. வேதம் என்னும் கடலில், வியாசர் என்னும் மத்தால் கடைந்து கிடைத்த வெண்ணெ#யே மகாபாரதம். அதன் சாரமான விஷ்ணு சகஸ்ரநாமம் அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப்பொருள்களை எடுத்துச் சொல்லி வீடுபேறுக்கு (மோட்சத்துக்கு) நம்மைத் தகுதிப்படுத்துகிறது.