சாத்துார் : சாத்துார் அருகே உப்பத்துார் சங்கராபுரம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பழமைவாய்ந்த இவ்ஆலய விழா நேற்று முன் தினம் (ஜூலை., 16ல்) இரவு 8:00 மணிக்கு சாத்துார் பாதிரியார் போதகர்மைக்கேல்ராஜ் தலைமையில் ராஜபாளை யம் பாதிரியார் எடிசன் கொடிமரத்திற்கு அர்ச்சனை செய்து திருவிழா கொடியேற்றினார்.
இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதன் பின் சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி ஜூலை 24 மாலை துவங்கிய ஜூலை 25 இரவு வரை நடக்கிறது. விழாவினை முன்னிட்டு தினமும் முக்கிய வீதிகள் வழியாக சப்பரம் பவனி நடைபெறுகிறது. ஜூலை 26 ல் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை திருவிழாக்குழுவினர் செய்துள்ளனர்