திண்டுக்கல்: திண்டுக்கல் கோயில்களில் ஆடி பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமியம்மன் கோயில்களில் ஆடி பிறப்பையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதே போல் தாண்டிக்குடி ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. ராஜ அலங்காரத் தில் முருகன் காட்சியளித்தார். கால பைரவர், விநாயகருக்கும் பூஜைகள் நடந்தது. ஏராளமா னோர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.