பதிவு செய்த நாள்
18
ஜூலை
2019
12:07
திருத்தணி: திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை, சாய்நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், குரு பவுர்ணமியையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு, சுப்ரபாதம், காகட ஆரத்தி நடந்தது. காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், காலை, 11:00 மணி முதல், மதியம், 12:30 மணி வரை சத்யநாராயண பூஜை நடந்தது. மாலை, 4:00 மணி முதல், 6:30 மணி வரை, சத்குரு சாயி பஜனைகள், பின், சந்தியா ஆரத்தியுடன் பவுர்ணமி பூஜை நிறைவடைந்தது.