சங்கராபுரம்:சங்கராபுரம் வட்டம் பூட்டை கிராமத்தில் தேர் திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பூட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நாளை 19ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடக்கிறது. விழாவை அமைதியாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வரவேற்றார்.
முன்னாள் ஊராட்சி தலைவர் கந்தசாமி, தி.மு.க., கிளைச் செயலர் முருகன், வழக்கறிஞர் பால அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், திருவிழாவில் யாரும் கட்சி சம்பந்தமான பேனர் மற்றும் கொடிகள் கட்டக்கூடாது . ஜாதி சம்பந்தமான டி சர்ட் போடக் கூடாது. விழா அமைதியாக நடக்க முழு ஒத்துழைப்பு தருமாறு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.
கடைகள் ஏலம்தேர் திருவிழாவில் தனி நபர் கடைகள் அதிகம் இடம் பெறும்.இந்த கடைகளுக் கானஏலம் இந்து அறநிலைய துறை ஆய்வாளர் கோவிந்தசாமி தலைமையில் கோவில் வளாகத்தில் நேற்று (ஜூலை., 17ல்) நடந்தது. முருகன் என்பவர் 3.75 லட்சம் ரூபாய்க்கு ஏலம்எடுத்தார்.