பதிவு செய்த நாள்
20
ஜூலை
2019
02:07
சென்னை : ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று (ஜூலை., 19ல்), சென்னை மற்றும் புறநகரில் உள்ள, அம்மன் கோவில்களில், ஏராள மான பெண் பக்தர்கள், பொங்கல் வைத்து, வழிபாடு நடத்தினர்.
ஆடி மாதத்தில், அம்மன் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது.ஆடி, முதல் வெள்ளி கிழமை யான நேற்று (ஜூலை., 19ல்), சென்னை மற்றும் புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில், ஏராளமான பெண் பக்தர்கள் குவிந்தனர்.மயிலாப்பூர், முண்டகக்கண்ணி அம்மன், கோல விழியம்மன்; திருவேற்காடு, கருமாரியம்மன்; மாங்காடு, காமாட்சி அம்மன்; திருமுல்லை வாயல், பச்சையம்மன்; பிராட்வே, காளிகாம்பாள் உள்ளிட்ட பல கோவில்களில், சிறப்பு அபிஷேகம் நடந்தது.நேற்று (ஜூலை., 19ல்) அதிகாலை, புற்றுக்கு பால் வார்க்கும் நிகழ்வு நடந்தது. பின், பொங்கல் வைத்து, பெண் பக்தர்கள், குலவை போட்டனர்.மதியம், கூழ் வார்த்து, பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. சிலர், அலகு குத்தி, நேர்த்திக் கடன் நிறை வேற்றினர்.