பதிவு செய்த நாள்
20
ஜூலை
2019
02:07
பண்ருட்டி : பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் செடல் மற்றும் திருத்தேர் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
பண்ருட்டி வைத்திரெட்டிப்பாளையம் படைவீட்டம்மன் கோவிலில், நேற்று (19 ம் தேதி) ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, செடல் மற்றும் திருத்தேர் உற்சவம் நடந்தது. கடந்த 10 ம் தேதி விநாயகர் பூஜை நடந்தது. 11ம் தேதி காலை 6:00 மணிக்கு கொடி யேற்றத்துடன் விழா துவங்கியது. 12ம் தேதி முதல் நேற்று 18ம் தேதி வரை தினந்தோறும் காலை, இரவு உற்சவர் அம்மன் பல்லக்கில் வீதியுலா நடந்தது.
நேற்று (19ம்தேதி) காலை 6: 00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், 7:30 மணிக்கு சக்திகரகம் எடுக்க கெடிலம் ஆற்றங்கரை செல்லுதல், காலை 11:00 மணிக்கு சக்திகரக ஊர் வலம் ,11:30 மணிக்கு மாவு விளக்கு எடுத்தல், 12:30 மணிக்கு செடல் உற்சவம், 2:30 மணிக்கு திருத்தேரில் உற்சவர் படைவீட்டம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க, திருத்தேர் வடம் பிடித்தல் துவங்கி வீதியுலா நடந்தது.இரவு 10:00 மணிக்கு மூலவர், உற்சவர் அம்மனுக்கு பால் மற்றும் பன்னீர் அபிஷேகம் நடந்தது.
விழாவில் எஸ்.வி.ஜூவல்லர்ஸ் அருள், ஐஸ்வர்யா ஹோம் நீட்ஸ் ராஜ்மோகன், முரளி ஆயில் மில் சுந்தர், அக் ஷயா பருப்பு மண்டி செந்தில்குமார், மீனா ஜூவல்லர்ஸ் தேவராஜ், ரத்தனா மெட்ரிக் பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன், யாமினி ஊறுகாய் மூர்த்தி, வீரபத்ரா ஸ்டோர் ராஜேந்திரன், வள்ளி விலாஸ் சரவணன், இன்சூரன்ஸ் ஆலோசகர் கணேசன் உள்ளிட்ட ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.