பதிவு செய்த நாள்
20
ஜூலை
2019
02:07
உடுமலை:உடுமலை ராமகிருஷ்ண பஜனை சபாவின், 72ம் ஆண்டு ஆடி மாத ஆன்மிக நிகழ்ச் சிகள் வரும் 22 ம் தேதி துவங்குகிறது.
உடுமலை ராமய்யர் திருமண மண்டபத்தில், ஆண்டுதோறும், ஆடி மாதத்தில், ராமகிருஷ்ண பஜனை சபா சார்பில், ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. வரும், 22ம் தேதி, 72 ம் ஆண்டு நிகழ்ச்சிகள் துவங்குகிறது. அன்று, மாலை, 6:30 மணிக்கு, ’திருப்பாவையின் அமுது’ என்ற தலைப்பில், துஷ்யந்த் ஸ்ரீதர் ஆன்மிக சொற்பொழிவு துவங்குகிறது. மூன்று நாட்கள் இந்த தலைப்பில் சொற்பொழிவு நடக்கும்.வரும், 25ம் தேதி முதல், 28ம் தேதி வரை, ’கோவில்கள், நேற்றும், இன்றும், நாளையும்’, நான் நல்லவனா? யோகம் ஒரு அறிமுகம் ஆகிய தலைப்பு களில், வேளுக்குடி கிருஷ்ணன் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை, ராமகிருஷ்ணா பஜனை சபாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.