பதிவு செய்த நாள்
22
ஜூலை
2019
02:07
சிதம்பரம்: சிதம்பரத்தில் இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டு பெருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.சிதம்பரம், கனகசபை நகர் இருதய ஆண்டவர் ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 12ம் தேதி துவங்கியது. நேற்று (ஜூலை., 21ல்)ஆலயத்தில் நற்கருணை ஆராதனை, தேர் பவனி நடந்தது.
10 நாட்கள் உற்சவத்தில் பல்வேறு பகுதி ஆலயங்களின் பங்கு தந்தைகள் பங்கேற்ற சிறப்பு பிரார்த்தனை நடந்தது.நேற்று முன்தினம் (ஜூலை., 20ல்) இரவு பங்கு தந்தை சுந்தரராஜன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி ஆராதனை நிறைவேற்றி, திரு இருதய ஆண்டவர், ஆரோக்கிய அன்னை, புனித சூசையப்பர் ஆகிய தேர்களை சிறப்பு ஆராதனை செய்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை அடைந்தது.
நிகழ்ச்சியில் பங்கு தந்தை சுந்தரராஜன், நிர்வாகிகள் ஜெகநாதன், அலெக்ஸ்சாண்டர், தன்ராஜ், ஆரோக்கியசாமி, மோகன், வல்லபதாஸ், சின்னையன், ஸ்டீபன், சாமுவேல் உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.