பதிவு செய்த நாள்
23
ஜூலை
2019
02:07
மாமல்லபுரம்: நெம்மேலி, ஆளவந்தார் நினைவிடத்தில், குருபூஜை விழா நடந்தது. மாமல்ல புரம் அடுத்த, நெம்மேலியைச் சேர்ந்தவர் ஆளவந்தார். மாமல்லபுரம் - நெம்மேலி இடையே, கடற்கரை பகுதியில், சவுக்கு வளர்த்து வளப்படுத்திய இவருக்கு, ஆங்கிலேய அரசு, இலவச நிலம் வழங்கி கவுரப்படுத்தியது.
இவரது மறைவிற்கு பின், இவருக்கு சொந்தமான, 1,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை, தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கிறது. ஆளவந்தார், அவரது உயிலில் குறிப்பிட்டுள்ளபடி, மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள், திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில்களில், அறநிலையத் துறை, உற்சவ சேவையாற்றுகிறது.
இவர் பிறந்த பூரட்டாதி நட்சத்திர நாளான நேற்று (ஜூலை., 22ல்), அவரது, 105ம் ஆண்டு குரு பூஜை நடந்தது.நேற்று முன்தினம் (ஜூலை., 21ல்),, திருவாய்மொழி சேவையாற்றி, நேற்று (ஜூலை., 21ல்) காலை, திருமஞ்சன வழிபாடு நடத்தப்பட்டது.