தேவகோட்டை : தேவகோட்டை கோட்டையம்மன் கோவில் ஆடி பொங்கல் விழா நேற்று (ஜூலை., 23ல்) துவங்கியது. முன்னதாக ஆற்றங்கரையோரம் உள்ள பிரதான கோவிலிலிருந்து பிடிமண் எடுத்து வந்து அம்மனுக்கு பிரதிஷ்டை செய்து விழா துவங்கியது.
பீடத்திற்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. 30ந் தேதி இரண்டாவது செவ்வாயன்று பெண்கள் பொங்கல்,மாவிளக்கு வைத்து வழிபாடு நடத்துவர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.