ஆடி மாதம் என்றாலே அது அம்மனின் மாதமாகும். ஆண்டுதோறும் பல வெள்ளி வந்தாலும், ஆடிவெள்ளிக்கென்று தனிச்சிறப்புண்டு. அம்மன் கோயில் உள்ள அனைத்து இடங்களிலும் ஆடித்திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில் களில் பக்தர்கள் கூழ் ஊற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். அறிவியலுக் கும் அம்மனுக்கும் சொந்தமான ’கூழ்’ வாங்குவதற்கு பக்தர்கள் காத்துக் கிடக்கின்றனர். கிராமங்கள் தோறும் ஆடி மாதத்தை முன்னிட்டு ஆடி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.