காரைக்கால்: மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் அம்மையார் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட, காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் காரைக்காலில் ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு மாங்கனி திருவிழா கடந்த 13ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. பின்னர் திருக்கால்யணம், மாங்கனித்திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து ஒருமாதம் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அம்மையார் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிஅளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.