பதிவு செய்த நாள்
25
ஜூலை
2019
12:07
திருப்போரூர் : திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில், நாளை (ஜூலை., 26ல்), ஆடிக்கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சிறப்பு வாய்ந்த ஆடிக்கிருத்திகை விழா, நாளை (ஜூலை., 26ல்),, நடைபெறு கிறது. விழாவை யொட்டி, இன்று (ஜூலை., 25ல்), இரவு, 7:00 மணியளவில், மூலவர் கந்தபெருமானுக்கு மஹா அபிஷேகம், தீப, துாப ஆராதனை நடக்கிறது. நாளை (ஜூலை., 26ல்) அதிகாலை, 3:00 மணியளவில், கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் காவடிகள் எடுத்து, ஊர்வலம் வருவர். மாலை, உற்சவர் சிறப்பு அபிஷேகமும், இரவு, கந்தபெருமான் தங்க மயில் வாகனத்தில் வீதியுலா வருதலும் நடைபெறும்.