பதிவு செய்த நாள்
25
ஜூலை
2019
12:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு, பக்தர்கள் மாட வீதியில் காவடி ஊர்வலம் வர பயன்படுத்தப்படும், 1,008 காவடிகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள கம்பத்து இளையனார் சன்னதியில் உள்ள, முருகப்பெருமானுக்கு காவடி ஏந்தி, மாட வீதி வலம் வந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். அதற்காக, 1,008 காவடிகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், சீரமைக்கப்பட்ட காவடிகள், கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி யில், மழை மற்றும் வெயிலில் சேதமடையாமல் இருக்க, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து காவடிகள் பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது.