பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நடைபெற்றது. பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கிழக்கு ரத வீதி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா பிப். 6 இரவு முகூர்த்தக்கால் நடுதல் உடன் துவங்கியது.
பிப். 17ல் கொடியேற்றம் நடந்த நிலையில் கோயில் முன் உள்ள திருக்கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது. நேற்று இரவு 7:55 மணிக்கு ஓம் சக்தி பராசக்தி கோஷத்துடன் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது.