பதிவு செய்த நாள்
26
ஜூலை
2019
11:07
ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழாவை நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
ராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆடித் திருக்கல்யாணம், ஆடி அமாவாசை, மாசி சிவராத்திரி, மாசி அமாவாசை முக்கிய விழாக்கள். ஆடி திருக்கல்யாண விழாவையொட்டி நேற்று கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள கொடிக் கம்பத்தில் கொடியேற்றப்பட்டது.பின் சுவாமி, அம்மனுக்கு நடந்த மகா தீபாராதனையில் கோயில் இணை ஆணையர் கல்யாணி, தக்கார் குமரன் சேதுபதி, கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஜூலை 31ல் ஆடி அமாவாசை, ஆக., 2ல் ஆடித் தேரோட்டம், ஆக.,5 ல் ஆடித் திருக்கல்யாண விழா நடக்கிறது. கோயிலில் ஆக., 10 வரை நடக்கும் விழாவில் தினமும் சுவாமி, அம்மன் தங்கம், வெள்ளி வாகனம், பல்லக்கில் வீதி உலா வருவர்.