Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரோஜா நிற பட்டாடையில் அத்திவரதர் ... ராமேஸ்வரத்தில் ஆடி திருக்கல்யாண விழா கொடியேற்றம் ராமேஸ்வரத்தில் ஆடி திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிக் கிருத்திகை: வடபழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2019
11:07

சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில் ஆடிக் கிருத்திகையொட்டி, அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

Default Image
Next News

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திவருகின்றனர். சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, அதிகாலை, 4:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை, சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

கோவிலின் தெற்கு ராஜகோபுரம் எதிரில், பொது தரிசனத்திற்காக, இரண்டு வரிசைகளும்; 50 ரூபாய் கட்டணத்தில், சிறப்பு தரிசனத்திற்காக, ஒரு வரிசையும் அமைக்கப்பட்டுள்ளன. வரிசையில் செல்லும் போதே, அர்ச்சனை சீட்டுகளை பெற்று கொள்ளலாம். சிறப்பு விரைவு தரிசனத்திற்கான, 100 ரூபாய் நுழைவுச்சீட்டு, கோவிலின் ராஜகோபுர வாசலில், காலை, 4:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை, விற்பனை செய்யப்படும். காவடி துாக்குவோர், மேற்கு கோபுரம் வழியாக கோவிலுக்குள் வந்து, வடக்கு மாடவீதி மற்றும் கிழக்கு மாவடவீதி வழியாக, உற்சவர் அர்ச்சனை செய்யுமிடத்தில், காவடிகளை செலுத்தலாம். காவடிக்கு, கட்டணம் ஏதுமில்லை. அதிகாலை, 4:00 – 12:00 மணிக்கு, சிறப்பு அலங்கார தரிசனம்; மதியம், 1:00 முதல், மாலை, 4:00 மணி வரை, தங்க கவச அலங்கார தரிசனம்; மாலை, 4:00 முதல், இரவு, 11:00 மணி வரை, சந்தன காப்பு புஷ்ப அலங்கார தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடிநீர், சுகாதாரம், வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கோவிலுக்கு வந்து செல்ல, மாநகர போக்குவரத்து கழகத்தின் வாயிலாக, சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar