நத்தம் : நத்தம், கோவில்பட்டியில் உள்ள செண்பவகவள்ளி அம்மன் சமேத கைலாசநாதர் கோயிலில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. வளாக த்தில் உள்ள கால பைரவருக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், விபூதி, புஷ்பம், மஞ்சள்நீர், தயிர், தேன், திருமஞ்சனம், அரிசிமாவு உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. இதையடுத்து மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய பைரவருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் கைலாசநாாதருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.