சிங்கம்புணரி அருகேயுள்ள வேட்டையன்பட்டி கோயில் ஆடித்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2019 01:07
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகேயுள்ள வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா நேற்று (ஜூலை., 25ல்) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வேட்டையன்பட்டி விஸ்வகர்ம கைவினைஞர் சங்கம் மற்றும் பொது மக்களால் 10 நாள் விழாவாக நடத்தப்படுகிறது. இக்கோயிலின் ஆடித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11:00 மணிக்கு காமாட்சி பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்க ளுக்கு காப்பு கட்டப்பட்டது. ஒவ்வொரு நாளும் இரவு அம்மன் பல அலங்காரத்தில் கோயி லை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஜூலை 25ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் தரிசனமும், ஆகஸ்ட் 1ம் தேதி காலை பால்குடம் மாலை 5:00 மணிக்கு பூத்தட்டு திருவிழாவும் நடைபெறும், ஆகஸ்ட் 2ம் தேதி பகல் 3:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும் இரவு 8:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலமும் நடைபெறும், ஆகஸ்ட் 3ம் தேதி காலை 11:00 மணிக்கு அன்னதானம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை வேட்டையன்பட்டி விஸ்வகர்ம கைவினைஞர் சங்கம் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்