பனிமயமாதா ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2019 01:07
துாத்துக்குடி, உலக பிரசித்திபெற்ற முத்துநகர் பனிமயமாதா ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.துாத்துக்குடியில் உள்ள பழமையான பனிமயமாதா ஆலயத்தில் ஜூலை 26 முதல் ஆக., 5 திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவை மத வேறுபாடின்றி கொண்டாடுகின்றனர். திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு, காலை 5:00 மணிக்கு முதல் திருப்பலியும், 6:00 மணிக்கு இரண்டாவது திருப்பலியும் நடந்தது. காலை 7:30 மணிக்கு துாத்துக்குடி மாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது.பின் கொடி கொண்டுவரப்பட்டு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. கொடியை பிஷப் ஏற்றிவைத்தார். முக்கிய விழாவான சப்பர பவனி ஆக., 5ல் நடக்கிறது. இதனை முன்னிட்டு துாத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.