பதிவு செய்த நாள்
27
ஜூலை
2019
01:07
பழநி, : ஆடிவெள்ளியை முன்னிட்டு, பழநி பெரிய நாயகியம்மன் கோயில், மாரியம்மன் கோயில் ஆகியவற்றில் திரளான பக் தர்கள் வழிபாடு செய்தனர். ஆடி லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு, பழநி கிழக்கு ரதவீதி பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூலை 17 முதல் ஆக. 10 வரை தினமும் மாலையில் நுாறாயிரம் மலர்கள் துாவி லட்சார்ச்சனை நடக்கிறது. ஆக. 11ல் வேள்வி நடைபெறவுள்ளது. நேற்று இரண்டாம் ஆடிவெள்ளியை முன்னிட்டு, பெரியநாயகியம்மனுக்கு அபிஷேகம் செய்து, மீனாட்சி அலங்காரத்தில் லட்சார்ச்சனை நடந்தது. மாரியம்மன் கோயில், திருஆவினன்குடி கோயில் துர்கையம்மன், தெற்குகிரிவீதி காளிகாம்பாள் கோயில், வனதுர்க்கை, மகிஷாசுரமர்த்தனி, லட்சுமிபுரம் மகாலட்சுமி, அடிவாரம் இட்டேரி ரோடு அரசமரம் சப்பாணி காளியம்மன் கோயில் நேதாஜிநகர் காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், அ.கலையம்புத்துார் கல்யாணி சமேத கைலாசநாதர் கோயிலில் லட்சார்ச்சனை, ஆடிவெள்ளி வழிபாடு நடந்தது.