பதிவு செய்த நாள்
27
ஜூலை
2019
02:07
விழுப்புரம் : விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை, இந்திரா நகர் புத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம், காலை 9:00 மணிக்கு சக்தி கரகம் ஜோடித்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பகல் 12:30 மணிக்கு சாகை வார்த்தல் மற்றும் மாலை 4:00 மணிக்கு பொங்கல் வைத்தல், இரவு 7:00 மணிக்கு கும்ப படையல் இடுதல் நிகழ்ச்சி நடந்தது.ஏற்பாடுகளை இந்திரா நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
கண்டாச்சிபுரம் வெற்றிவேல் குன்றத்தில் அமைந்துள்ள சக்திவேல் முருகன் கோவிலில், ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு தீபாராதனையும், சக்திவேல் முருகன் சுவாமிகள் வீதியுலாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.செஞ்சிபெரியகரம் சுப்ரமணியர் கோவிலில் 47வது ஆண்டு ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி, நேற்று காலை காளியம்மன் கோவிலில் இருந்து 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, சுப்ரமணியருக்கு பால் அபிஷேகம் செய்தனர். 12:00 மணிக்கு காவடி பூஜையும், மதியம் 2:00 மணிக்கு மிளகாய் பொடி அபிஷேகம், மார்பு மீது மாவு இடித்தல், செடல் குத்துதல் நடந்தது. தொடர்ந்து சக்தி கரகம் புறப்பட்டும், தீமிதி விழாவும் நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி ஜே.சி.பி., இயந்திரம், வேன், தேர் ஆகியவற்றை இழுத்து வந்தனர்.