பதிவு செய்த நாள்
30
ஜூலை
2019
02:07
சென்னை : விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்ட த்தை போலீசார் நேற்று (ஜூலை., 29ல்) நடத்தினர்.
நடப்பாண்டு, செப்., 2ம் தேதி, விநாயகர் சதுார்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னி ட்டு, சிலைகள் அமைத்து வழிபடும் அமைப்பினருடன், போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.அதன்படி, ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ் பகுதிவாசிகளுடன், போலீசார் நேற்று (ஜூலை., 29ல்) ஆலோசனை நடத்தினர்.உதவி கமிஷனர், கிருஷ்ணமூர்த்தி தலைமை யில், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் நடந்த கூட்டத்தில், விநாயகர் சிலைகளை வைக்க உள்ள அமைப்பினர், 60 பேர் பங்கேற்றனர்.
அவர்களுக்கு போலீசார், விநாயகர் சதுார்த்தி விழாவை அமைதியாக நடத்தி முடிக்க, கடைப் பிடிக்க வேண்டிய நடைமுறை, ஏற்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து, ஆலோசனை வழங்கினர்.