அலங்காநல்லுார்: அழகர்கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா ஆக.,7 காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
அன்று முதல் தினமும் மாலை 6:00 மணிக்கு மேல் சுந்தரராஜ பெருமாள் பல்வேறு வாகனங் களில் எழுந்தருளி சுவாமி புறப்பாடு நடைபெறும்.முக்கிய நிகழ்ச்சியான ஆடி தேரோட்டம் ஆக.,15ல் நடக்கிறது. அன்று அதிகாலை 5:15 மணிக்கு மேல் 6:00 மணிக்குள் தேவியருடன் தேரில் சுவாமி எழுந்தருளுவார். தொடர்ந்து 7:31 மணிக்கு மேல் 8:15 மணிக்குள் தேரோட்டம் துவங்கும். அன்றிரவு பூப்பல்லக்கு உற்ஸவம் நடக்கும்.