ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அமர்நாத் பனி லிங்க தரிசன யாத்திரை, கடந்த, 1ம் தேதி துவங்கியது. ஆகஸ்ட், 15ம் தேதி யாத்திரை நிறைவு பெறுகிறது. நேற்று, 1, 175 பேர் கொண்ட குழு, பனிலிங்கத்தை தரிசிக்க புறப்பட்டு சென்றது. கடந்த, 30 நாட்களில், அமர்நாத் பனிலிங்கத்தை, 3 லட்சத்து, 21ஆயிரத்து, 40 பேர் தரிசனம் செய்துள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.