மதுரை பகவதியம்மன் கோயில் சொத்திற்கு வாடகை வசூலிக்க வழக்கு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2019 02:07
மதுரை : திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரியில் பகவதியம்மன் கோயில் உள்ளது.
இதற்கு சொந்தமான 12 ஆயிரத்து 431 சதுர அடி காலி மனையிடம், தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. நிர்ணயித்தபடி 2018 ஜூலை வரை ஒரு கோடியே 76 லட்சத்து 61 ஆயிரத்து 322 ரூபாய் வாடகையை பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் செலுத்தவில்லை.இதனால் கோயில் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொகையை வசூலிக்க நடவடிக்கை கோரி அறநிலையத்துறைக்கு மனு அனுப்பினேன்.
வாடகையை, வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார். நீதிபதி அனிதா சுமந்த் அறநிலையத்துறை கமிஷனர், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக தலைவர், பகவதியம்மன் கோயில் இணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி ஆக.,27 க்கு ஒத்திவைத்தார்.