பதிவு செய்த நாள்
31
ஜூலை
2019
02:07
மதுரை : ”இயற்கையை பாதுகாக்க பஞ்சபூத வழிபாட்டுக்கு திரும்புங்கள்,” என, மதுரை வைகை பெருவிழா சிவனடியார்கள் மாநாட்டில் சுவாமி ராமானந்தா வேண்டுகோள் விடுத்தார்.
தியாகராஜர் கல்லுாரி செயலர் ஹரி தியாகராஜன் தலைமை வகித்தார். கவுமார மடாலய சிரவையாதீனம் சுவாமி ராமானந்தா பேசியதாவது: கலாசாரம், பாரம்பரியத்தை பறிகொடுத்து வருகிறோம். நதிகள், இயற்கையை காக்க தவறுகிறோம். முன்னோர்கள் பஞ்சபூத வழிபா ட்டை தீவிரமாக மேற்கொண்டனர். நாம் படிப்படியாக அவ்வழிபாட்டை காவுகொடுக்கிறோம். நீர், நிலம், காற்று, ஆகாயத்தை மாசுபடுத்தி, அவற்றின் விளைவையும் அனுபவிக்கிறோம். புதுப்புது நோயால் மனிதன் பாதிக்கப்படுகிறான். இப்பாதிப்பில் இருந்து மீண்டுவர பஞ்சபூத வழிபாட்டுக்கு திரும்ப வேண்டும். இயற்கையை வழிபட்டு காக்க வேண்டும்.
அப்போதுதான் இயற்கையின் பலனை அனுபவிக்க முடியும் என்றார். அழகர்கோவில் எம்.வி. எம்.எம்., கல்லுாரி முதல்வர் அருணகிரி, ஓய்வுப்பெற்ற கல்லுாரி பேராசிரியை ஞானபூங் கோதை, திருவாசக பிச்சையா ஆகியோர் திருவாசகத்தின் சிறப்புகளை விளக்கினர். திரு விளையாடல் புராண ஆராய்ச்சி மைய பொருளாளர் சரவணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மைய ஒருங்கிணைப்பாளர்கள் முருகேசன், சந்திரசேகரன் செய்தனர்.
கே.ஆர்.எஸ்., மாணவர்களின் கலைநிகழ்ச்சிபள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ராம நாதபுரம் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் (ஓய்வு) முத்துலட்சுமி தலைமையில் நடந்தது. மதுரை கே.ஆர்.எஸ்., பள்ளி மாணவ, மாணவியரின் கண்ணப்பர் புராணம், மீனாட்சி திருக் கல்யாணம் குறித்த நாட்டிய நாடகம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.