கோவை:கோவை ராம்நகர், ஐயப்பன் பூஜா சங்கத்தில், நடந்து வரும் ஆடி உற்சவ ஆன்மிக நிகழ்ச்சியில், நேற்று (ஜூலை., 30ல்) ’கிருஷ்ண விவாஹம்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.
சொற்பொழிவாளர் ஜெயந்தி ஜானகிராமன் பேசியதாவது:குழந்தைகளை பக்தியுடன், ஆன்மிக நாட்டத்தில் ஈடுபடும் வகையில் வளர்க்க வேண்டும். அவர்களின் வாழ்க்கை நல்வழியில் செல்ல, அவர்களுக்கு ஆன்மிகம் மட்டுமே உறுதுணையாக இருக்கும். குழந்தைகளின் செயலில்தான், ஒவ்வொரு பெற்றோரின் வளர்ப்பும் தெரியும். அவர்களின் ஒழுக்கம்தான் பெற்றோரை சமுதாய த்தில் தலை நிமிர்ந்து நிற்க வைக்கும். எனவே, குழந்தை வளர்ப்பில் அதிக அக்கறை காட்டி, அவர்களுக்கு புராணங்கள், ஆன்மிக தகவல்களை சொல்லிக்கொடுப்பது அவசியம்.இவ்வாறு, அவர் பேசினார்.