சிவகங்கை விஷ்ணு துர்க்கை கோயிலில் நவசண்டீ யாக யக்ஞ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2019 02:07
சிவகங்கை : சிவகங்கை பிள்ளைவயல் காளிகோயில் ஆர்ச் அருகில் உள்ள விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் ஆடிப்பூர உற்ஸவ விழாவை யொட்டி இன்று திருவிளக்கு பூஜை நடக்கிறது. இக்கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் கடந்த 25 ம்தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. இன்று 31ம் தேதி மாலை 6:00 மணிக்கு ஆடிஅமாவாசையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடக்கிறது. வரும் 1ம் தேதி காலை 8:00 மணிக்கு கல்வியாகமும், மாலை 6:00 மணிக்கு மாணவர்களுக்கான சிறப்பு பூஜையும் நடக்கிறது. 2ம் தேதி வராகி அம்மனுக்கு சிறப்பு யாகமும், மாலை 7:00 மணிக்கு சண்டி யாகமும், 3ம்தேதி காலை 8:00 மணிக்கு பால்குடம், சண்டியாக ஆரம்பம், பகல் 1:00 மணிக்கு யாகம் நிறைவும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. 4ம் தேதி மாலை 7:00 மணிக்கு ஊஞ்சல் அலங்காரமும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக தலைவர் இளங்கோவன், ரமணன் குருக்கள், அர்ச்சகர் பால சுப்பிரமணி அய்யர் ஆகியோர் செய்துள்ளனர்.