பதிவு செய்த நாள்
01
ஆக
2019
02:08
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பலரும் முன்னோர் களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்பவர்கள் ஏழைகளுக்கு உணவு , பசுமாட்டிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் வழங்குவர். முன்னோர்களது ஆத்மா சாந்தியடைய மோட்ச விளக்கும் ஏற்றுவர்.
திருச்சுழி திருமேனிநாதர், அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில், அமிர்தலிங்கேஸ்வரர் கோயில், எரிச்சநத்தம் மாசாணியம்மன் சக்தி பீடம், சிவகாசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம், வைத்தியநாத சுவாமி கோயில், ராஜபாளையம் மயூரநாத சுவாமி கோயில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம், விருதுநகர் மேலத்தெரு சொக்கநாதர் சுவாமி கோயில், திருத்தங்கல் கருநெல்லிநாதர் கோயில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்களுடன் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பக்தர்கள் வழிபாடு நடத்தி மோட்ச விளக்கும் ஏற்றினர். அருப்புக் கோட்டை அருகே திருச்சுழி குண்டாறு, விருதுநகர் சொக்கநாதர் கோயில் வளாகத்திலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.