உள்வாங்கிய நவபாஷாண கடல்: புனித நீராடிய பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2019 02:08
தேவிபட்டினம்: தேவிப்பட்டினம் நவபாஷாண கடல் உள் வாங்கியதால் ஆடி அமாவாசையான நேற்று (ஜூலை., 31ல்) புனித நீராடிய பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், திருமண தடை, ஏவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பரிகார பூஜைகள் செய்வதற்கும் தினமும் ஏராள மான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நவபாஷாண த்தில் நேற்று (ஜூலை., 31ல்) ஆடி அமாவாசை என்பதால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நவபாஷாணத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
அதிகாலை முதல் காலை 10:45 மணி வரை நவகிரகங்கள் அமைந்துள்ள பகுதியையும் தாண்டி கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டதால், குறைந்தளவு தண்ணீரில் நீராட வேண்டிய நிலை யிலும், குறைந்தளவு தண்ணீரே இருந்ததால் கடல்நீர் சேறும் சகதியுமாகவும் மாறி பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். காலை 10:45 மணிக்கு பிறகே நீர் மட்டம் இயல்பு நிலைக்கு திரும் பிய நிலையில், பக்தர்களில் கூட்டம் குறைவாக இருந்தது.