பதிவு செய்த நாள்
01
ஆக
2019 
02:08
 
 கம்பம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டனர். அருவியில் குளிக்க தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நிம்மதியடைந்தனர்.
ஆன்மிக சிறப்பு வாய்ந்த சுருளி அருவியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று (ஜூலை., 31ல்) அதிகாலை முதல் ஆயிரக்கணக்கில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் திரண்டனர். 6:00 மணி முதல் அருவியில் குளிக்க கூட்டம் குவிந்ததால், வனத் துறையினர் ஒழுங்குபடுத்தும் பணியில் தீவிரம் காட்டினர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருந்த போதும் அதிக கூட்டத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குளித்த பின்னர் ஆற்றங்கரையில் புரோகிதர்களிடம் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட் டனர். பின்னர் பூதநாராயணர் கோயில், வேலப்பர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில் களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். 
ஆதி அண்ணாமலையார் கோயிலில் சிவனடியார் முருகன் சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்தார். அன்னதானம் நடைபெற்றது. ஹைவேவிஸ் அணையில் இருந்து தண்ணீர் திறக் கப்பட்டதால் அருவியில் தண்ணீர் விழுந்தது. பொதுமக்கள் சிரமம் இன்றி குளித்தனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
* ராயப்பன்பட்டி சண்முகநாதன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இங்குள்ள தீர்த்தத்தில் குளித்துவிட்டு, கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில்களிலும் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மஞ்சளாற்றின் கரையில் அமைந்துள்ளது. ஆடி மாத அமாவாசை என்பதால் காலையில் இருந்து பக்தர்கள் வருகை அதிமாக இருந்தது.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , ஆராதனை நடந்தது. அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
முன்னோருக்கு வழிபாடு: மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி ஏராளாமனோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, கோயில்களில் வழிபாடு நடத்தினர். வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் பொதுமக்கள் குளித்து தர்ப்பணம் செய்து கண்ணீஸ்வர முடையார் கோயிலில் விளக்கேற்றி வழிபட்டனர். தேனி குன்னுார் வைகை ஆற்றில் ஐந்து நதிகளான வைகை, சுருளியாறு, முல்லையாறு, கொட்டக்குடி ஆறு, வாழையாறு சங்கமிக்கும் சங்க மிக்கும் இடத்தில் விநாயகர் கோயில் அருகே வைகை பெருவிழா அமைப்பினர் தர்ப்பணத் திற்கு ஏற்பாடு செய்தனர். இங்கும் ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர். கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
* பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் வராகநதி படித்துறையில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் திதி கொடுத்து விட்டு, பாலசுப்பிரமணியரை வணங்கினர். வரதராஜப்பெருமாள் கோயில், மாரியம்மன் கோயில், கம்பம் ரோடு காளியம்மன் கோயில், காளஹஸ்தீஸ்வரர், திரவுபதிஅம்மன், பள்ளத்து மற்றும் தண்டுப்பாளையம் காளியம்மன்,கைலாசநாதர் கோயில், பாண்டிகோயில், வடுகபட்டி வெள்ளகரடு முனியாண்டி கோயில் மற்றும் ஏராளமான குல தெய்வம் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
* ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது மாவூற்று வேலப் பர் கோயில். மருத மரங்களின் வேர்பகுதியில் இருந்து வரும் சுனை நீரே இக்கோயிலின் தனிச் சிறப்பு. வறட்சியால் தற்போது சுனையும் வற்றி விட்டது. ஆடி அமாவாசையை முன்னிட்டு மாவூற்று வேலப்பர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகங்கள், ஆராதனைகள் நடந்தது. காவல் தெய் வம் கருப்பசாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து சென்றனர். அருகில் பள்ளத்தில் தேங்கி கிடந்த அசுத்தமான நீரில் பலரும் குளித்து செல்லும் நிலை ஏற்பட்டது.
* போடி: போடி பரமசிவன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது. போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதி கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அலங்காரங்களை போடி ஜமீன்பரம்பரையை சேர்ந்த பாண்டி சுந்தர பாண்டியன் செய்திருந்தார்.
* மேலச்சொக்கநாதர் கோயில், போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், சுப்பிரமணி யர் கோயில், வினோபாஜிகாலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திர காளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.